About Us

நாங்கள் யார்?

தமிழ் நலம் தமிழை வாசிக்க, அறிய, கிரகிக்ககூடியவர்கள் பலன் பெறும் வகையில் உடல், உள நல ஆரோக்கியம் பற்றிய கட்டுரைகளையும், காணொளிகளையும், படங்களையும் தாங்கி வரும் ஒரு இணையத் தளம். 2006 வாக்கில் அச்சுப் பிரதிகளாக வெளிவந்த ‘நலம்’ சஞ்சிகையின் மறு பிறப்பு இது. ‘நலம்’ சஞ்சிகைக்கு வாசகரிடத்தில் நல்ல வரவேற்பிருந்தது. ஆனால் பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்ற ஒன்றாகிவிட, இப்போது இணையத்தின் மூலம் அது புதுப் பொலிவுடன் முகம் காட்டுகிறது.

உங்கள் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு  – வீடு குழுமம்

நலம் பேண ஆவல்...

தமிழ் நலத்தின் நோக்கம் என்ன?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பது நமது முன்னோர் மொழிகளிலொன்று. ஆரோக்கியமான உடலும் உளமும் மீதெல்லாவற்றிற்கும் அவசியமான ஒன்று என்பதே அதன் அர்த்தம்.தமிழர் பண்பாடு கற்றுத்தந்த வாழ்வியலுக்கு இயற்கைதான் வைத்தியன். விரும்பியோ விரும்பாமலோ வாழும் சூழலை மாற்றிக்கொண்ட எம்மோடு அந்த வைத்தியனை நாம் கொண்டுவரவில்லை. அதனால் எமக்கு இப்போ செயற்கை வைத்தியன் அவசியமாகிவிட்டான். இச் சூழலில் அந்த செயற்கை வைத்தியத்தை இலகுவில் புரிந்துகொள்ள எல்லோராலும் முடிவதில்லை. ‘தமிழ் நலம்’ இதற்காகவே பிறப்பெடுத்துள்ளது. நவீன மருத்துவ உலகை எளிய வகையில் உங்கள் முன் வைப்பதுவே எமது நோக்கம். அதற்காகப் பல மருத்துவர்களும், சேவையாளர்களும் எங்களுடன் இருக்கிறார்கள்.

பலன் பெறுங்கள்

Print Friendly, PDF & Email