BioNTech தடுப்பு மருந்து 90% திறனுள்ளது – Pfizer தலைமை நிர்வாகி!

20 மில்லியன் அளவுகளைக் கனடா வாங்கியுள்ளது

ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசெர் (Pfizer), BioNtech எனும் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைத் தயாரித்துள்ளதாகவும் அது நோய்த்தடுப்பில் 90% வெற்றியைத் தருமெனவும் கடந்த திங்களன்று அறிவித்திருந்தது. ஆனால் அது அறிவிக்காத முக்கிய விடயம், அம் மருந்தைப் பாதுகாக்க 70 பாகை செல்சியஸுக்குக்கீழ் உறை நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை.

நோய்த் தடுப்புக்கான மருந்தைத் தயாரிக்கும் போட்டியில் பல உலக மருந்து நிறுவனங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. மக்களின் பாதுகாப்பை முன்நிறுத்தாமல் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டு இந் நிறுவனங்கள் செயற்படுகின்றனவா என்பதையே இப்படியான அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

கனடா போன்ற அநேகமான செல்வந்த நாடுகளில் அரசாங்கங்கள் இப்படியான மருந்துகளை என்ன விலை கொடுத்தும் வாங்கும் என்பதை அறிந்த மருந்து நிறுவனங்கள் ஏழை நாடுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது அதிசயமானதல்ல.

ஃபைசெர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (CEO), இவ்வறிவிப்பைச் செய்த அன்று அந் நிறுவனத்தில் தான் வைத்திருந்த $5.6 மில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளை விற்றிருந்தார். மருந்து 90% நோய்த்தடுப்பை உறுதிசெய்கிறது என அறிவித்ததும் நிறுவனத்தின் பங்குகள் உலகச் சந்தையில் 15% உயர்ந்தன. உடனேயே தலைமை நிர்வாகி தனது பங்குகளை பங்கொன்றுக்கு $41.94 வீதம் விற்றுவிட்டார்.

கோவிட் தொற்றினால் களைத்துப்போயிருக்கும் உலக மக்களுக்கு இப்படியான செய்திகள் மகிழ்ச்சியைத் தருவனவாயினும் ஃபைசெரின் அறிவிப்பு பல முக்கிய தரவுகளை வெளியிடவில்லை என்பது இவ்வவசர அறிவிப்பின்மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.

ரஷ்யா, சீனா, ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் வேறும் பல நாடுகளும், நிறுவனங்களும் தமது தடுப்பு மருந்துகளும் மனிதஹ்ப் பரிசோதனைகளின் இறுதி நிலைகளில் உள்ளனவெனவும் சில நாடுகள் அவசர தேவைகளில் இவற்றைப் பாவித்து வருகின்றனவெனவும் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தனது மருந்து 92% திறனுள்ளது என அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஃபைசெர் தனது அவசர அறிவிப்பையும் செய்திருக்கிறது.

ஆனால் இம் மருந்தை இதர நாடுகளுக்குக் கொண்டுசெலவதற்கு -75 பாகை செல்சியஸ் உறைநிலையைக் கொடுக்கவல்ல உபகரணங்களைத் தாங்கிய வாகனங்கள் தேவை. இக் காரணங்களுக்காக இந்தியா போன்ற நாடுகள் ஃபைசெரின் தடுப்பு மருந்தை வாங்குவதற்குப் பின்நிற்கின்றன. மருத்துவமனைகளும், மருந்தகங்களும் இந்த உறைநிலையைத் தரவல்ல ஃபிறீசர்களை விசேடமாகத் தருவிக்க வேண்டும்.

கனடா, அமெரிக்கா போன்ர நாடுகளே இவ்விடயம் குறித்து தமது கரிசனைகளைத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவிலுள்ள பல ‘பணக்கார’ மருத்துவமனைகள் இந்த ‘சுப்பர் ஃபிறீசர்களை’ வாங்குவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. வறிய மாநிலங்களும், கிராமப்புற மருத்துவமனைகளும் இம் மருந்துகளைப் பெறமுடியாமல் இருக்குமெனக் கூறப்படுகிறது.

வைரஸின் மரபணுக் குறியீட்டைப் பிரதி செய்து மனித உடலுக்குள் அனுப்புவதன் மூலம் உடல் அதை நிஜமான வைரஸ் என நினைத்து அதற்கெதிரான தடுப்பாற்றலை உற்பத்தி செய்யுமென்பதே BioNTech மருந்தின் நோக்கம். சில் தடுப்பு மருந்துகள் செயலிழகப்பட்ட வைரஸ்களை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் தடுப்பாற்றலை விருத்தி செய்கின்றன.

ஆனால் இம் மருந்து வயோதிபர்களிலும், இளையோரிலும், குழந்தைகளிலும் ஒரே திறனுடன் செயற்படுமா, எவ்வள நாட்களுக்கு இது உடலைப் பாதுகாக்கும், தீவிரத் தொற்றுள்ள நோயாளிகளில் எப்பயாகச் செயற்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்பதனால் மருத்துவ சமூகம் இவ்விடயத்தில் தங்கள் கரிசனையை வெளியிட்டு வருகிறது.

ஃபைசெரின், இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களின்படி இம் மருந்து 45,000 மக்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளதெனவும், 12 சிறுவர்கள் முதல், பல வித இனக்குழுமங்களும் இவர்களில் அடங்குவர் எனவும் தெரியவருகிறது.

இதுவரை அபாயகரமான பக்க விளைவுகள் எதையும் இம் மருந்து நோயாளிகளில் தோற்றுவிக்கவில்லை என ஃபைசெர் கூறுகிறது.

கனடா, 20 மில்லியன் அள்வுகள் BioNTech மருந்து தயாரிப்பிற்கான அனுமதியை வாங்கியிருக்கிறது. இருப்பினும் கனடாவின் அரச சுகாதாரக் கட்டுபாடுகளை விதிக்கும் Health Canada இம் மருந்துக்கான அனுமதியை இன்னும் வழங்கவில்லை. இம் மருந்தின் திறன் அதிகரிக்குமெனத் தெரியும் பட்சத்தில் அதிகளவு மருந்துகளுக்கான அனுமதியை வாங்குமெனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் இம் மருந்து கனடியர்களின் பாவனைக்குக் கிடைக்கலாமெனத் தான் நம்புவதாக பிரதமர் ட்றூடோ தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email