வீட்டிலிருந்தே கோவிட் பரிசோதனை செய்துகொள்ளலாம் – FDA அனுமதி கொடுத்தது
வீட்டிலிருந்தபடியே கோவிட் பரிசோதனையைச் செய்து 30 நிமிடங்களில் பெறுபேறுகளைப் பெறக்கூடிய கருவியொன்றைக் கலிபோர்ணியாவிலுள்ள லூசிறா ஹெல்த் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. இக் கருவியின் பாவனைக்கான அனுமதியைத் தற்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வழங்கியுள்ளது.
இப் பரிசோதனையின்போது ஒருவர் தனது மூக்கின் இரு துவாரங்களிலுமிருந்து சளி போன்ற பதார்த்தத்தை பருத்திக் குமிழில் எடுத்து கருவியோடு கொடுக்கப்பட்டிருக்கும் பரிசோதனைக் குழாயிநுள் போட்டு நன்றாகாக் கலக்க வேண்டும். பின்னர் இக் குழாயை பற்றறிய்ல் இயங்கும் இக் கருவிக்குள் புகுத்திவிட்டால் அரை மணி நேரத்தில் இக் கருவியின் ஒளிரும் அறிவிப்பு நோய் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.
14 வயதுக்கு குறைந்தவர்கள் மூத்தவர்களின் உதவியுடன் இதைப் பாவிக்கவேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் கிடைக்கும் இக் கருவி விரைவில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கருவியைத் தயாரிக்கும் லூசிறா ஹெல்த் நிறுவனத்தின் அறிவித்தலின்படி, இதன் செயற்திறன் 94% – அதாவது 100 பரிசோதனைகளில் 94 தடவைகள் இது சரியான பெறுபேற்றைக் கொடுத்திருக்கிறது – எனப்படுகிறது.
தற்போது பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் PCR பரிசோதனையை ஒத்த வழிமுறையை இக் அக்ருவி கையாள்கிறது. SARS-CoV-2 வைரஸின் மரபணுத் தடயங்கள் ஒருவரது மூக்குப் பதார்த்தத்தில் இருக்கிறதா என்பதை loop mediated amplification reaction (LAMP) எனப்படும் படிமுறை மூலம் இக் அக்ருவி வைரஸின் இருப்பை நிர்ணயிக்கிறது. இருப்பினும் PCR பரிசோதனைகளின் அளவுக்கு இது சரியான முடிவுகளைத் தருமென்பதற்கு உத்தரவாதம் இல்லை என New York Times பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது.
இக் கருவியின் விலை அண்ணளவாக $50 வரை இருக்கலாமென லூசிறா எதிர்பார்க்கிறது. அடுத்த வருடம் (2021) வசந்த கால மட்டில் இது விற்பனைக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
No related posts.