முதுமை மறதியைத் (Dementia) தாமதிக்க வைக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

 

அல்சைமர்ஸ் நோயாளியின் மூளை

வயது முதிர்ந்தவர்களைத் தாக்கும் ‘அல்சைமர்ஸ்’ (Alzheimer’s) என்ற நோயைத் தாமதப்படுத்தும் மருந்தொன்றை முதன் முதலாகத் தாம் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘பயோஜென்’ (Biogen) என்ற பார்மசூட்டிக்கல் நிறுவனமொன்று அறிவித்திருக்கிறது.

https://youtu.be/0GXv3mHs9AU

‘அடுகனுமாப்’ (aducanumab) எனப்படும் இம் மருந்து உண்மையில் ஒரு நோயெதிர்ப்பு (antibody) பதார்த்தம். அல்சைமர்ஸ் நோயாளிகளின் மூளையின் நரம்புக் கலங்களில் கலங்களில் சேர்க்கையுறும் நச்சுப் பதார்த்தங்களை இந்த ‘அடுகனுமாப்’ என்ற ஒரு வகையான புரதம் (antibody) துப்புரவு செய்கிறதென இதைக் கண்டுபிடித்த நிறுவனம் தெரிவிக்கிறது.

‘அல்சைமர்ஸ்’ நோயாளிகளின் மூளையின் நரம்புக் கலங்களினுள் காலவோட்டத்தில் சேர்க்கையுறும் ‘அமைலோய்ட்’ (amyloid), மற்றும் ‘ரா’ (Tau) ஆகிய இரண்டு நச்சுப் பதார்த்தங்களே இந் நோய்க்குக் காரணம் என ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர்.

‘அடுகனுமாப்’ என்ற புதிய மருந்து இந்த நச்சுப் பதார்த்தங்களை அழித்துவிடுகிறதென அதைக் கண்டுபிடித்த நிறுவனம் கூறுகிறது.

கடந்த மார்ச் (2019) இந்த மருந்து வேலை செய்யவில்லை எனக்கூறி இன் நிறுவனம் அதைக் கைவிட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்த நல்ல செய்தியை அறிவித்திருக்கிறது.

இந்த மருந்தை அதிக பலத்தோடு (higher dose) எடுக்கும் நோயாளிகளில் ஞாபக சக்தியும், மொழியைக் கையாளும் பக்குவமும், நாளாந்த அலுவல்களான துணி துவைப்பு, கடைகளுக்குப் போய் பண்டங்கள் வாங்குதல், வீட்டைத் துப்புரவு செய்தல் போன்றனவும் மீண்டு வந்திருந்ததை இந் நிறுவனம் அவதானித்தது.

இந்த மருந்தை நோயாளிகளின் பாவனைக்கு, அமெரிக்க அரசின் மத்திய மருந்து நிர்வாகம் (Federal Drug Administration) அது மருத்துவ உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

ஒரு மருந்தை நோயாளிகளின் பாவனைக்கு அனுமதிக்கு முன்னர் அம் மருந்து பரிசோதனை கூடத்திலும், விலங்குகளிலும் அதைத் தொடர்ந்து மனிதர்களிலும் (clinical testing) பரிசோதிக்கப்பட்டு அதன் தரவுகளை அரச திணைக்களமான FDA பரிசீலனை செய்து அம் மருந்தால் பெறப்படும் பலன்கள் அதனால் வரக்கூடிய ஆபத்துக்களை விட அதிகமானால் மட்டுமே அனுமதியை வழங்குவர்.

மேலே குறிப்பிட்ட ‘அடுகனுமாப்’ மருந்துக்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

Print Friendly, PDF & Email