மீண்டும் தலையெடுக்கிறது கோவிட்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

இன்னுமொரு கோவிட்-19 அலைக்கு முகம் கொடுக்க ஐரோப்பா தயாராக இருக்கவேண்டுமென நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கான ஐரோப்பிய மையம் எச்சரித்துள்ளது.

‘ஒரு வருடத்துக்கு முந்தைய நிலையில் நாம் இல்லையென்றாலும்கூட கோவிட்-19 இன்னும் எங்களி விட்டு முற்றாக நீங்கவில்லை” என மையத்தின் பணிப்பாளர் அண்ட்றியா அம்மொன் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மணிப்பாளர் ஹான்ஸ் குலூக் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் குளிர்காலத்தில் பருவகால சளிசுரங்களுடன் கோவிட்-19 உம் இணைந்து பாரதூரமான வியாதிகளையும் மரணங்களையும் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இதன் காரணமாக மருத்துவர்கள், தாதிகள் மற்றும் சுகாதார சேவைப் பணியாளர்கள் எதிர்பாராத அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படலாமெனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே இயலுமானவரையில் கிடைக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் மற்றும் நோய்த்தடுப்பு முயற்சிகளைப் பாவித்துக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி சென்ற வருடம் இதே காலப்பகுதியில் இருந்ததைவிட கோவிட்-19 தற்போது 8% த்தால் அதிகரித்துள்ளது. இருப்பினும் இறப்புகள் பெருமளவு குறைந்துள்ளன. அத்தோடு ஐரோப்பாவில் பல மில்லியன் மக்கள் இன்னும் தடுப்பு மருந்துகளை எடுத்திருக்கவில்லை. கோவிட்-19 ஆரம்பத்திலிருந்து இதுவரை 620 மில்லியன் மக்கள் கோவிட் தொற்றுக்கு ஆளாகியும் அவர்களில் 6.5 மில்லியன் மக்கள் மரணமடைதுமுள்ளனர்.

Print Friendly, PDF & Email