புற்றுநோய் | அறிகுறிகள் தோன்றுவதற்கு 4 வருடங்களுக்கு முன்னரேயே இரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்!

ஜூலை 30, 2020: 

புற்றுநோய் தனது அறிகுறிகளைக் காட்டும்போது அது ஓரளவுக்குப் பரவியிருப்பது பொதுவான செயற்பாடு. இதனால் அந் நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதற்கு பல நூற்றாண்டு காலமாக மருத்துவ சமூகம் முயற்சித்து வருகிறது.

இம் முயற்சிகான இலக்கை அடையும் தருணம் இப்போது வந்திருக்கிறதா என்பதை கடந்த வாரம் இயற்கை தகவல் தொடர்பு (Nature Communications) என்ற சஞ்சிகையில் வந்திருக்கும் கட்டுரை எழுப்புகிறது.

ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று செய்த ஆராய்ச்சியின்போது இரத்தப் பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்ட பதார்த்தங்களைக் கொண்டு எதிர்காலத்தில் ஒருவருக்கு புற்றுநோய் உருவாகுவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கண்டுபிடித்துவிடலாம் எனத் தெரியவந்துள்ளது. 

புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஒருவரில் தெரியவருவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே அவரது இரத்தப் பரிசோதனையின் மூலம் நாங்கள் நிரூபித்திருக்கிறோம் என சந்தியாகோவிலுள்ள கலிபோர்ணிய பல்கலைக்கழக உயிரியல் பொறியாளரும் (bioengineer),  "That's never been done before" என்ற பிரசுரத்தை வெளியிட்டவருமான, குண் ஜாங் என்பவர் தெரிவிக்கிறார்.

முன்னைய முறைகள்

ஜாங் குழு செய்த ஆராய்ச்சியின்போது, 2007 ஆம் ஆண்டிலிருந்து, சீநாவின் ராய்ஜூ பிரதேசத்தில் வாழ்ந்த 123,000 சுகதேகிகளின் இரத்த மாதிரிகளை ஒவ்வொரு வருடமும் பரிசோதித்து வந்தார்கள். இப்படிச் சேகரிக்கப்பட்ட 1.6 மில்லியன் மாதிரிகளை வைத்துப் பாதுகாக்கவென ஒரு பெரிய கட்டிடமே தேவைப்பட்டிருந்தது. 10 வருடங்களின் பின், இந்த 123,000 சுகதேகிகளில் 1,000 பேருக்கு புற்றுநோய் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஐந்து பொதுவான புற்றுநோய்களான வயிற்றுப் புற்றுநோய் ((stomach), களப் புற்றுநோய் (esophageal), குடற் புற்றுநோய் (colorectal), நுரையீரல் புற்றுநோய் (lungs), ஈரல் புற்றுநோய் (liver) ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை ஜாங்க் குழு மேற்கொண்டது. பான்சீர் (PanSeer) எனப் பெயரிடப்பட்ட இப் பரிசோதனையின் மூலம், ஒருவரது மரபணுவில் ஏற்படும் இரசாயன மாற்றங்களைப் பொறுத்து (DNA methylation) அவருக்கு எந்த வகையான புற்றுநோய்கள் வரலாம் என்பதை எதிர்வுகூறமுடியும் என அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

இதுவரையில், இக்குழுவின் பரிசோதனைகளைன்படி, 90% சரியாகவும், 5% தவறாகவும் ( நோயுள்ளவர்கள் என (false positive), நோயற்றவர்களை அடையாளம் காணுதல்) முடிவுகளைக் கொடுத்துள்ளது.

இது விடயத்தில் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஜாங் ஒத்துக்கொள்ளும் அதே வேளை, பரம்பரையாகச் புற்றுநோய்களுக்கு உள்ளாகி வருபவர்கள் (high risk groups) விடயத்தில் இப்படியான பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்கிறார். குறிப்பாகச், சதயப் புற்றுநோய் (pancreatic cancer) வந்த ஒருவருக்கு அதன் அறிகுறிகள் தெரியும்போது நோய் முற்றிய நிலைக்குப் போய்விடுகிறது என்பதையும் அப்படியானவர்களுக்கு இப் பரிசோதனை உதவிசெய்யும் எனவும் ஜாங் நம்புகிறார்.

புற்றுநோய் தனது அறிகுறிகளைக் காட்டும்போது அது ஓரளவுக்குப் பரவியிருப்பது பொதுவான செயற்பாடு. இதனால் அந் நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதற்கு பல நூற்றாண்டு காலமாக மருத்துவ சமூகம் முயற்சித்து வருகிறது.

இம் முயற்சிகான இலக்கை அடையும் தருணம் இப்போது வந்திருக்கிறதா என்பதை கடந்த வாரம் இயற்கை தகவல் தொடர்பு (Nature Communications) என்ற சஞ்சிகையில் வந்திருக்கும் கட்டுரை எழுப்புகிறது.

ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று செய்த ஆராய்ச்சியின்போது இரத்தப் பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்ட பதார்த்தங்களைக் கொண்டு எதிர்காலத்தில் ஒருவருக்கு புற்றுநோய் உருவாகுவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கண்டுபிடித்துவிடலாம் எனத் தெரியவந்துள்ளது. 

புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஒருவரில் தெரியவருவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னதாகவே அவரது இரத்தப் பரிசோதனையின் மூலம் நாங்கள் நிரூபித்திருக்கிறோம் என சந்தியாகோவிலுள்ள கலிபோர்ணிய பல்கலைக்கழக உயிரியல் பொறியாளரும் (bioengineer),  “That’s never been done before” என்ற பிரசுரத்தை வெளியிட்டவருமான, குண் ஜாங் என்பவர் தெரிவிக்கிறார்.

முன்னைய முறைகள்

ஜாங் குழு செய்த ஆராய்ச்சியின்போது, 2007 ஆம் ஆண்டிலிருந்து, சீநாவின் ராய்ஜூ பிரதேசத்தில் வாழ்ந்த 123,000 சுகதேகிகளின் இரத்த மாதிரிகளை ஒவ்வொரு வருடமும் பரிசோதித்து வந்தார்கள். இப்படிச் சேகரிக்கப்பட்ட 1.6 மில்லியன் மாதிரிகளை வைத்துப் பாதுகாக்கவென ஒரு பெரிய கட்டிடமே தேவைப்பட்டிருந்தது. 10 வருடங்களின் பின், இந்த 123,000 சுகதேகிகளில் 1,000 பேருக்கு புற்றுநோய் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஐந்து பொதுவான புற்றுநோய்களான வயிற்றுப் புற்றுநோய் ((stomach), களப் புற்றுநோய் (esophageal), குடற் புற்றுநோய் (colorectal), நுரையீரல் புற்றுநோய் (lungs), ஈரல் புற்றுநோய் (liver) ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை ஜாங்க் குழு மேற்கொண்டது. பான்சீர் (PanSeer) எனப் பெயரிடப்பட்ட இப் பரிசோதனையின் மூலம், ஒருவரது மரபணுவில் ஏற்படும் இரசாயன மாற்றங்களைப் பொறுத்து (DNA methylation) அவருக்கு எந்த வகையான புற்றுநோய்கள் வரலாம் என்பதை எதிர்வுகூறமுடியும் என அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

இதுவரையில், இக்குழுவின் பரிசோதனைகளைன்படி, 90% சரியாகவும், 5% தவறாகவும் ( நோயுள்ளவர்கள் என (false positive), நோயற்றவர்களை அடையாளம் காணுதல்) முடிவுகளைக் கொடுத்துள்ளது.

இது விடயத்தில் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஜாங் ஒத்துக்கொள்ளும் அதே வேளை, பரம்பரையாகச் புற்றுநோய்களுக்கு உள்ளாகி வருபவர்கள் (high risk groups) விடயத்தில் இப்படியான பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்கிறார். குறிப்பாகச், சதயப் புற்றுநோய் (pancreatic cancer) வந்த ஒருவருக்கு அதன் அறிகுறிகள் தெரியும்போது நோய் முற்றிய நிலைக்குப் போய்விடுகிறது என்பதையும் அப்படியானவர்களுக்கு இப் பரிசோதனை உதவிசெய்யும் எனவும் ஜாங் நம்புகிறார்.

Print Friendly, PDF & Email