பிந்திய ஆகாரம் கொழுப்பைச் சேகரிக்கிறது – ஆய்வு
உடற் பருமன் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பலவித நோய்களுக்குக் காரணமாக இருக்கிறதென மருத்துவ நிபுணர்கள் நீண்ட காலமாகக் கூறிவருகிறார்கள். உடற் பருமனை அள்விட மருத்துவர்கள், ஒருவரது உயரத்தையும் எடையையும் கொண்டு உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களுக்கமைய உருவாக்கப்பட்ட சுட்டியை (Body Mass Index (BMI)) பாவிக்கிறர்கள். இதன்படி ஒருவரது Mஈ 18.5 முதல் 25 வரை இருப்பின் அவர் சுகதேகி எனப்படுவார். 25 முதல் 30 வரை உள்ளவர் அதிக உடலெடை கொண்டவர் (Over Weight) எனவும் 30 க்கும் மேற்பட்டவர்கள் மீறிய உடற்பருமனைக் கொண்டவர்கள் (Obese) எனவும் அழைக்கப்படுகிறார்கள். இதன் பிரகாரம் அமெரிக்காவின் தற்போதைய சனத்தொகையின் 42% மானோர் மீறிய உடற்பருமனைக் கொண்டவர்கள் என்கிறது ஆய்வு.
உடற்பருமன் அதிகரிப்பதற்குப் பல ஆய்வுகள் பலவித காரணங்களைக் கூறிவருகின்றன. இவற்றில் தற்போது வந்துள்ள ஆய்வு, உடற்பருமன் அதிகரிப்பிற்கு தாமதமாக உணவருந்துவது ஒரு காரணமெனக் கூறுகிறது. தேவைக்கதிகமாக உணவருந்தும்போது அவ்வுணவு முழுமையாக ‘எரிகப்பட்டு’ சக்தியாக மாற்றப்படாமையால் எஞ்சிய உணவு கொழுப்பாக மாற்றப்பட்டு உடலிழையங்களில் சேமிக்கப்படுகிறது எனப் பல முந்தைய ஆய்வுகள் கூறுவருகின்றன என்றாலும் தமதமாக உணவருந்துவதற்கும் கலங்களின் தொழிற்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி வந்த முதலாவது அறிக்கை இதுவாகும்.
பிறிஹாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகளான வுஜோவி மற்றும் ஷீயர் ஆகியோர மேற்கொண்ட ஆய்வின்போது உடலெடை அதிகமான அல்லது மீறிஅ உடற்பருமன் கொண்ட (over weight (Mஈ =25-30/>30)) 16 பேர்கள் மீது பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவர்களில் பாதிப்பேர் சரையான நேரத்தில் உணவை உண்டனர். மீதிப்பேருக்கு 4 மணித்தியாலங்களின் பின்னர் அதே அளவு உணவு பரிமாறப்பட்டது. எல்லோரும் ஒறெ நேரத்துக்கு உறக்கத்துக்குப் போனார்கள், ஒரே நேரத்தில் தூக்கம் கலைத்தார்கள். இவரக்ள் அனைவரது உடல் வெப்பநிலை, இரத்தப் பரிசோதனை, பசி நிலைமை அனைத்தும் நாள் பூராவும் தரவெடுக்கப்பட்டன. அத்தோடு தோலுக்குக் கீழே காணப்படும் கொழுப்பிழையங்களில் (adipose tissue) கொழுப்பு படிவதை ஆராய்வதற்காக அவர்களது கொழுப்பிழையங்கள் பகுத்தாயப்பட்டன (biopsy).
இவ்வாய்வுகளின் முடிவில் விஞ்ஞானிகள் கண்டறிந்தது: லெப்டின் (leptin) மற்றும் கிரெலின் (ghrelin) ஆகியன எமது பசியை கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக லெட்டின் உணவின் திருப்தியை (வயிறு நிறைந்த உணர்வு) அறிவிக்கிறது. பிந்தி உணவருந்தும்போது லெப்டினின் சுரப்பு குறைக்கப்படுவதால் பசி இன்னும் அடங்கவில்லை என்ற உணர்வு தொடர்கிறது. உரிய நேரத்தில் உண்பவர்களில் இக்குணாதிசயம் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது பிந்தி உண்வருந்துபவர்களில் உணவு எரிக்கப்பட்டு சக்தியாக (கலோரிகளாக) மாற்றப்படுவதும் தாமதமாகவே நடைபெறுகிறது. இதனால் கொழுப்பு மேலும் சேகரிக்கப்படுகிறது (adipogenesis). இதனால் உடற் பருமன் அதிகரிக்கிரது.