தேகாப்பியாசம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்

இருதய, சுவாச அப்பியாசங்கள் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது.

ஜனவரி 1, 1991 முதல்  டிசம்பர் 31, 2014 வரை 122,007 கிளீவ்லாண்ட் கிளினிக் தனது நோயாளிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து இது நிறுவப்பட்டிருக்கிறதென அமெரிக்க மருத்துவச் சங்க திறந்த வலையமைப்பின் கட்டுரையொன்றில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமது நோயாளிகளை அதியுச்ச, உச்ச, சராசரி, சராசரியிலும் குறைவான, குறைந்த என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து பல தரங்களில் அப்பியாசங்களை அளித்ததாகவும் அவர்களில் அதியுச்ச அளவில் அப்பியாசங்களைச் செய்தவர்கள் நீண்டகால ஆரோக்கியமான வாழ்வை எட்டக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமென ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அப்பியாசம் செய்யதவர்களது ஆரோக்கியம் புகைப்பவர்கள், நீரிழிவு நோய் கொண்டவர்கள் மற்றும் இருதய வியாதியால் பீடித்தவர்களைவிடவும் தம் குறைந்தது என அவர்கள் கருதுகிறார்கள்.

அப்பியாசத்தின் மூலம் அதியுச்ச திடகாத்திரத்தைக் கொண்ட 70 வயதுக்கு மேலானவர்கள தமது ஆரோக்கியத்தை 30 வீதத்துக்கு மேலாக அதிகரித்துக் கொண்டுள்ளார்கள் எனவும் இவ் வாராய்ச்சி மூலம் தெரிய வருகின்றது.

Print Friendly, PDF & Email