டெங்கு ஒழிப்பிற்கு ‘ட்றோண்’ தொழில்நுட்பம் | இலங்கை யோசனை!

 

நுளம்பை ஒழிப்பதற்கு ‘ட்றோண்’ களைப் பாவிப்பது பற்றி இலங்கையின் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

ஆர்தர் சீ. கிளார்க் நிலையத்தை பார்வையிடச் சென்ற தொழில்நுட்பம், ஆய்வுகள் ராஜங்க அமைச்சர் திலங்க சுமதிபால டெங்கு நுளம்புகளை ஒழிப்பதில் ‘ட்றோண்’ தொழில்நுட்பத்தைப் பாவிப்பது பற்றி ஆராயுமாறு பணித்திருக்கிறார்.

இலங்கையில் டெங்கு வைரஸினால் உடல்நலம் மட்டுமல்ல அபிவிருத்தியும் பாதிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காடி அதை ஒழிப்பதில் தொழில்நுட்பத்தைப் பாவிப்பது பற்றி நீண்டதொரு உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டுபிடித்து, அவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பொதுநலத் திணைக்கள ஊழியர்களுக்கு அனுப்பும் பரீட்சார்த்த நடைமுறையை இலங்கை ஆராய்ச்சியாளர் ஏற்கெனவே கணுபிடித்திருந்தது மட்டுமல்லாது அன் நுளம்புகளைத் தாக்க பக்டீரியாவை ஏவிவிடும் நடைமுறையையும் ஏற்கெனவே பரீட்சித்திருந்தார்கள்.

இதன் இரண்டாவது கட்டமாக, ‘நனோ சட்டல்லைட்’ டுகளைப் பாவிப்பது பற்றி அமைச்சரின் வருகையின்போது ஆராயப்பட்டது.

உலகின் பல நாடுகளிலும் நுளம்புகளை ஒழிக்க ‘ட்றோண்’ தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டு வருகிறது.

மலேரியாவின் தாக்கம் உலகில் குறைந்துவரும் வேளை டெங்கு நோய் அதி வேகமாகப் பரவி வருகிறது. தன்சானியாவில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை டெங்குக்கு இரையாகிறது எனப் புள்ளிவிபரம் சொல்கிறது. உலகில் 2017 இல் மட்டும் 475,000 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்திருக்கிறார்கள். 87 நாடுகளில், 217 மில்லியன் பேர் நோய்ய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நுளம்பு முட்டைகள் பொரிப்பதற்கு முன்பதாகவே அவற்றின் மேல் சிலிக்கோன் படலத்தால் (பசை) மூடிவிடுவிடப்படுகிறது. ட்றோண்கள் மூலம் இச் சிலிக்கோன் ஸ்பிறே தாவரங்கள், மறைவிடங்கள் மீது தெளிக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email