கோவிட்-19 | ‘புகைத்தல் தீங்கு விளைவிக்காது’
புகைப்பவர்களை கொறோனாவைரஸ் அணுகாது என பிரான்சில் செய்யப்பட்ட புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. புகையிலையிலிருந்து பெறப்படும் நிக்கோட்டீன் என்ற பதார்த்தம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதாகவும், அப் பாதர்த்தத்தின் மூலம் சொத் தொற்றைத் தடுக்க முடியுமா அன ஆராய்ச்சி தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரிசிலுள்ள பிரபல மருத்துவமனையொன்றில் கோவிட்-19 தொற்றுக் கண்ட 343 நோயாளிகளிலும், குறைவான நோயறிகுறிகளைக் கொண்ட 139 பேரிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இம் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
“நோய்த் தொற்றுக் கண்டவர்களில் 5% பேர் மட்டுமே புகைப்பவர்களாக இருந்தனர்” என இந்த ஆய்வின் இணை விஞ்ஞானி, பேராசிரியர் சாஹிர் அமூரா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் 35% வீதமானோர் புகை பிடிப்பவர்களாவர்.
சென்ற மாதம், சீனாவில் செய்யப்பட்ட இதே போன்றதொரு ஆய்வின்போது 1000 நோய்த் தொற்றுள்ளவர்களில் 12.6% பேர் மட்டுமே புகைப்பவர்களாக இருந்தார்கள் என ‘நியூ இங்க்லண்ட் ஜேர்ணல்’ செய்தி வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சீனாவின் மொத்த சனத்தொகையில் 26% புகை பிடிப்பவர்கள்.
புகைத்தலின்போது உள்வாங்கப்படும் நிக்கொட்டீன் என்நும் பதார்த்தம் கலங்களின் வாங்கிகளின்மேல் (receptors) ஒட்டிக்கொண்டு வைரஸ் கலங்களில் தம்மைப் பிணைத்துக்கொள்வதைத் தடுப்பதனால் அவை கலங்களுக்குள் புகுந்து தன்னை இனவிருத்தி செய்வதும் தடுக்கப்படுகிறது என்று பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பிரான்சின் பிரபல விஞ்ஞானியும், இதன் இணை ஆய்வாளருமான ஜான் பியர் சாஜூ தெரிவித்தார்.
மனிதரில் மேலும் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு பிரான்ஸ் நாட்டின் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெறுவதற்காக இவ் விஞ்ஞானிகள் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டமாக, பாரிசிலுள்ள பிற்றி-சல்பெட்றியே மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களில் நிக்கொட்டீன் ஒட்டிகளை ஒட்டிவிடுவதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராயவிருக்கிறார்கள்.
அதே வேளை, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவிலுல்ள ஒரு நோயாளியிலும், நிக்கொட்டீன் ஒட்டிகளை ஒட்டி பரிசோதிப்பதற்காக அவர்கள் விண்ணப்பிதிருக்கிறார்கள்.
நோய்த் தொற்றின்போது, “cytokine storms’ எனக் கூறப்படும், உடல் மேற்கொள்ளும் எதிர் நடவடிக்கை கட்டு மீறிய அளவுக்குப் போவதனால் நோயாளிகளுக்கு மரணம் ஏற்படுகிறதா என்பதும் விஞ்ஞானிகளால் தீவிரமாக ஆராயப்படும் ஒரு விடயம். நிக்கொட்டீன் இந்த உடலின் எதிர்ப்பாற்றலின் மித மிஞ்சிய எதிர்வினையைக் கட்டுப்படுத்துமா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இருப்பினும், வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் அவசரப்பட்டு நிகொட்டீனைத் தேடி ஓடவேண்டாமென நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். “நிக்கொட்டீனின் கேடு விளைவிக்கும் தன்மைகளையும் மக்கள் மறந்துவிடக்கூடாது. இதுவரை புகைக்காதவர்கள் புகைத்தலை ஆரம்பிக்க வேண்டாம்” என பிரான்சின் உயர் சுகாதார அதிகாரி ஒருவர், இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்.
புகைத்தைல், பிரான்சின் மரணங்களுக்குக்கான காரணிகளில் முதலாமிடத்தில் இருப்பதோடு, வருடமொன்றுக்கு அது 75,000 மக்களையும் பலிகொள்கிறது.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் 155,000 பேர் பாதிக்கப்பட்டும், அவர்களில் 21,000 பேர் மரணித்தும் உள்ளனர்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் 155,000 பேர் பாதிக்கப்பட்டும், அவர்களில் 21,000 பேர் மரணித்தும் உள்ளனர்.
No related posts.