கஞ்சா குடிப்பவர்களுக்கு ஒரு இலவச எச்சரிக்கை!

கஞ்சா குடிப்பவர்களுக்கு இருதய வியாதி, பக்கவாதம் (stroke), மாரடைப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், உடற் பருமன் அதிகரிப்பு போன்ற வியாதிகள் வரலாம் என அமெரிக்க இருதய சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்கா, கனடா உட்பட்ட பல மேற்கு நாடுகளில் பொழுது போக்கு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா பாவனையை அரசுகள் அங்கீகரித்து வருகின்றன. ஆனாலும் கஞ்சா பாவனையால் உடல், மூளை நலம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை முற்றாக அறிந்துகொள்ளாமல் அரசுகள் சட்டங்களைத் தளர்த்துவது ஆரோக்கியமானதல்ல எனப் பல உடலியல், உளவியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 2023 இல் அமெரிக்க இருதய சங்கத்தின் ஆதரவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாவிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது தினமும் கஞ்சா பாவிப்பவர்களில் 34% மானோருக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு எனவும் வயது முதிர்ந்தவர்களில் இது 20% எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கஞ்சா பாவனையால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி , All of Us Research Programa மற்றும் National Institutes of Health ஆகிய இரு வேறு தனித் தனி அமைப்புகள் ஆய்வுகளைச் செய்தன. இதில் வயது வந்த 157,000 பேர்கள் பங்குபற்றியிருந்தார்கள். பல்வேறு கலாச்சார, இனக்குழுமங்கள் பங்குபற்றிய இக்குழுவின் வாழ்க்கைமுறைகள், உடலியல் தன்மைகள், சூழல் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பால்ரிமோறிலுள்ள மெட்ஸ்ரார் ஹெல்த் நிறுவனத்தைச் சேர்ந்த யாகூபு பெனி-அல்ஹாசன், M.D., M.P.H. என்னும் மருத்துவரே இந்த ஆய்வுகளைச் செய்திருந்தார். இருதய வியாதிகள் எதுவுமற்றவர்களெனக் கருதப்பட்ட இக்குழுமம் ஒரே கால அடிப்படையில் தொடர்ந்து 4 வருடங்களுக்கு கஞ்சாவைப் பாவித்து வந்தது. புகை பிடிப்பவர்கள் (tobacco) இக்குழுமத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.

இவ்வாய்வுகளின் விளைவாகக் கண்டறியப்பட்டவை:

  • இவ்வாய்வுக் காலத்தில் 2958 பேர் (ஏறத்தாழ 2%) இருதய வியாதிக்கு ஆளாகியிருந்தனர்.
  • தினமும் கஞ்சா குடிப்பவர்களில் 34% மானோருக்கு இருதய வியாதி ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தோற்றம் கண்டிருந்தன. இங்கு வயதோ, பால் வேறுபாடோ, புகை பிடித்த வரலாறோ எந்தவித மாறுபாடுகளையும் காட்டவில்லை.

இவ்வாய்வில் வேற்படுத்தப்படாத ஒரு விடயம் பாவனையாளர் கஞ்சாவைப் புகையாக உள்ளிழுத்தார்களா அல்லது வாய் மூலம் உண்டார்களா என்பது. இது நிச்சயமாக பெறுபேறுகளில் வித்தியாசத்தைக் காட்டும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இவ்வாய்வின் பெறுபேறுகளாகக் காணப்பட்ட வியங்களாவன: கஞ்சாவைப் புகையாக உள்ளிழுப்பவர்களது இரத்தத்தில் கார்பன் மொனொக்சைட், தார் (tar) ஆகியவை சேர்க்கயுற்று இருதயத்தின் தசைகளைப் பாதிப்பதுடன், இருதய வலி, துடிப்பில் சீரின்மை, மாரடடைப்பு போன்றவற்றை உருவாக்குகின்றன என அமெரிக்க இருதய சங்கத்தின் விஞ்ஞானியான றொபேர்ட் எல். பேஜ் II கூறுகிறார். (Image Credit: Harward Health)

Print Friendly, PDF & Email