எமது உடலில் எத்தனை உறுப்புக்கள் உள்ளன?
மனித உடலை இயக்கிவரும் உறுப்புக்கள் தொடர்பாக நம் முன்னோர் மிக நீண்ட காலமாகவே புதிர் விளக்க முயன்று வருகின்றன. பண்டய எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பழுதடையாமல் வைத்திருக்க உறுப்புக்களை அகற்றினார்கள். இதனால் உறுப்புகள் பற்றிய பல குறிப்புக்களை அவர்கள் வைத்திருந்தார்கள். சீனரும் மனித உடலின் உறுப்புக்கள் பற்றி எழுதி வைத்திருந்த பல தொன்மையான குறிப்புகள் கிடைத்துள்ளன. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நம்முடலின் அங்கங்கள் பற்றி புதிய கருவிகளின் ஆராய்ச்சியாளர் தமது கணிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
உறுப்புக்கள், உடலின் பொதுத் தேவைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றும் இழைங்களின் தொகுப்பு. ஒவ்வொரு உறுப்பும் மனித இயக்கத்திற்காகவோ அல்லது வாழ்தலுக்காகவோ செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ” என்கிறார் கொலொறாடோ பல்கலைக்கழக உயிரியல் திணைக்களப் பேராசிரியர் லீசா எம்.ஜே.லீ.
ஆனால் ஒவ்வொரு உறுப்பும் மனிதனின் உயிர்வாழ்தலுக்கு அவசியமானது என்றும் கூறமுடியாது. மூளை, இருதயம், ஈரல், குறைந்தது ஒரு சிறுநீரகம், குறைந்தது ஒரு சுவாசப்பை ஆகியன உயிர்வாழ்தலுக்கு முக்கியமான 5 உறுப்புக்கள். இவற்றில் ஒன்று முற்றாகச் செயலிழக்குமானால் இறப்பு நிச்சயம். எனவே இவற்றை உயிருறுப்புக்கள் (vital organs) என்பார்கள்.
உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கின்றன என்பதற்குப் பல வித்தியாசமான விடைகள் கிடைக்கலாம். பொதுவாக 78 உறுப்புக்கள் எனப் பலரும் சொல்வார்கள். உயிருறுப்புக்கள் உட்பட, நாக்கு, வயிறு, தைறோயிட், சிறூநீர்ப்பை, சதயம் ஆகியவ்ற்றோடு மேலும் தநி அல்ல்லது சோடியான உறுப்புக்கள் இதில் அடங்கும். எலும்புகளும் பற்களும் ஒவ்வொரு அங்கமாக எடுத்துக்கொள்ளப்படும்.
உறுப்பு என்றால் என்ன என்பதில், உடற்கூறியல் நிபுணர்களின் கருத்து இதில் வேறுபடுகிறது. இழையவியல் நிபுணர்களான லீ போன்றவர்கள் உறுப்புக்களை கலங்களின் அளவுக்கு ஆராய்பவர்கள். மாறாக உடற்கூறியல் நிபுணர்கள் உறுப்புக்களை கண்னாற் பார்க்கும் அளவுக்கு ஆராய்பவர்கள். எனவே இவர்கள் ரண்டுபேரும் பார்க்கும் பார்வையில் இவ்வுறுப்புக்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது.
லீயின் கணிப்புப்படி, பற்களையும், 208 எலும்புகளையும் தனித்தனி உறுப்புக்களாக எண்ணினால் உடலிலுள்ள மொத்த உறுப்புக்களின் எண்ணிக்கை 315 எனக் கணிக்கப்படுகிறது. எலும்புகளோடு தசைகளை இணைக்கும் நாரிழையங்கள், நரம்புகள், நாடிகள், நாளங்கள் போன்றவற்றை ஒவ்வொரு உறுப்பாகவே இங்கு ஏடுத்துக்கொள்ளப்படுகிறது.
உடலியக்கம் என்ற இசை நிகழ்வில் ஒவ்வொரு உறுப்பும் தத்தம் தேவைகளின்போது ஒத்திசைக்கின்றன என்கிறார் லீ.
No related posts.