உங்கள் பிள்ளைகள் உங்களைவிட உயரமாக வளர்ந்திருக்கிறார்களா? – அப்படித்தான் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்

-அகத்தியன்

சமீப காலங்களில் மனிதர்களின் சராசரி உயரம் அதிகரித்து வருவதாகவும் சிறுமிகள் விரைவாகவே பூப்பு எய்திவிடுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். புதிய ஆய்வு ஒன்று அதற்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்திருக்கிறது.

சமீபத்தில் ‘இயற்கை’ (Nature) என்ற சஞ்சிகை ஒன்றில் வெளிவந்த கட்டுரையொன்று இதற்கான விடையத் தருகிறது. பிரித்தானியவைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் உட்படப் பல பிரித்தானிய மற்றும் அமெரிக்க பல்கலைக் கழகங்கள் பங்கெடுத்த ஆய்வின் பிரகாரம், 20ம் நூற்றாண்டில் பிரித்தானியரின் சராசரி உயரம் 10 செ.மீ. ஆலும், சுமார் 20 செ.மீ. வரை இதர நாடுகளிலும் மனிதரின் சராசரி வளர்ச்சி அதிகரித்திருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

கூர்ப்புக் கொள்கையின்படி மனிதர்களின் தேவைகள், வளங்கள் அவர்களது உடலுறுப்புக்களில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது ஏற்றுக்கொள்ளப்ப்ட்டு வரும் ஒரு விடயமாகவிருந்தாலும், மனித உடல் அதை எப்படிச் சாத்தியமாக்குகிறது என்பது ஒருபோதும் புரியப்பட்ட விடயாமக இருக்கவில்லை. கற்பிணித் தாய் அல்லது குழந்தைகளின் உடல்களில் ஊட்டச்சத்து என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து உடல் வளர்ச்சி மற்றும் பருவமெய்துவதற்கான கால நிர்ணயம் ஆகியவற்றைத் தீர்மானித்துக்கொள்கிறது என விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள்.

இப்போது அக்கருதுகோள் மாறியிருக்கிறது.

நமது உடலில் பல ஹோர்மோன்கள் பலவகையான தொழிற்பாடுகளில் ஈடுபட்டு வருவது உங்களுக்குத் தெரியும். இவற்றில் லெப்டின் (leptin) என்பது உடலிலுள்ள கொழுப்புக் கலங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்சுலின் (insulin) என்நும் மற்றுமொரு ஹோர்மோன் இரத்தத்தில் சீனி (சர்க்கரை) அதிகமாக இருக்கும்போது சதயத்தினால் உருவாக்கப்படுவது. இந்த இரண்டு ஹோர்மோன்களும் ஏறத்தாழ ஒற்றர்கள் போன்று செயற்பட்டு, இரத்தத்தில் சீனி, கொழுப்பு போன்றவற்றின் பிரசன்னம் பற்றி மூளையிலுள்ள ‘கட்டுப்பாட்டு அலுவலகமான’ ஹைப்போதலமஸ் (hypothalamus) என்னும் உறுப்புக்கு உடனுக்குடன் அறிவிக்கின்றன.

மூளையை அடையும் இந்த ஹோர்மோன்கள் அங்குள்ள சில குறிப்பிட்ட நரம்புக் கலங்களை (neurons) அடைந்ததும் அக் கலங்கள் மெலனோகோர்ட்டின்ஸ் ( melanocortins) எனப்படும் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இச் சமிக்ஞைகளை கிரகித்துக்கொள்ளும் இரண்டு வாங்கிகள் (receptors) மூளையில் உண்டு.

இவற்றில் முதலாவது மெலனோகோர்ட்டின் 4 வாங்கி (melanocortin 4 receptor (MC4R). இது மனிதரில் பசியைக் கிளப்புகிறது. இவ் வாங்கிகள் குறைவாக இருப்பவர்கள் ப்டற் பருமன் (obeisity) அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். இரண்டாவது வாங்கியான மெலனோகோர்ட்டின் 3 வாங்கி (melanocortin 3 receptor (MC3R)) உடல் வளர்ச்சி மற்றும் பருவமெய்தல் போன்ற தொழிபாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன.

இந்த முடிவுக்கு வருவதற்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் பாரிய ஆய்வொன்றைச் செய்யவேண்டியிருந்தது. பிரித்தானியாவில் சுமார் ஐந்து இலட்சம் தொண்டர்களின் மரபணுத் தரவுகள் ஆராய்ச்சிக்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் MC3R எனப்படும் வாங்கியை உருவாக்கும் கட்டுப்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கும் மரபணுவில் மாற்றங்கள் (mutations) காணப்பட்டவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்த்தார்கள். இயற்கையாக ஏற்படும் இம்மாற்றங்களைக் கொண்ட மரபணுக்கலைக் கொண்டவர்களெனச் சி ல ஆயிரம் பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அப்படியானவர்களில் பெரும்பாலானவர்களின் சராசரி உயரம் குறைந்தசர்களாகவும் அவர்கள் மிகக் குறைந்த வயதிலேயே பருவமெய்தியவர்களாகவும் இருக்கக் காணப்பட்டார்கள். இந்த ஹோர்மோனுக்கும் கொழுப்புக் கட்டுப்பாட்டுக்கும் தொடர்பில்லையெனினும் இவர்களின் உடல்கள் அதிகம் தசைப்பிடிப்பாகவும் இருக்கவில்லை.

இந்தக் கருதுகோளை நிரூபிக்க இங்கிலாந்திலுள்ள ஏவோன் என்னுமிடத்தில், 1991-1992 ஆண்டுகளில் 6,000 குழந்தக்ளை ஆய்வுக்குட்படுத்தினர். இவர்களில் 6 குழந்தைகள் MC3R ஹோர்மோனுக்குப் பொறுப்பான மரபணுவில் விகாரங்களைக் (mutations) கொண்டவர்களாக அவதானிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே உயரம் குறந்தவர்களாகவும், உடலில் தசை குறைவானவர்களாகவும் இருக்கக் காணப்பட்டனர். இவ்வாய்வின் மூலம் மரபணுக்களிலி ஏற்படும் விகாரங்கள் (மாற்றங்கள்) மிக இளம் வயதிலேயே ஆரம்பிக்க முடியும் என்பதநையும் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்கள்.

இவ்வாராய்ச்சியின்போது ஒருவர் மட்டும் மிகவும் குள்ளமானவராகவும் அவர் 20 வயதில் பருவமடைந்தவர் என்பதையும் விஞ்ஞானிகள் அவதானித்தார்கள். அவரது மரபணுக்களை ஆராய்ந்து பார்க்கும்போது MC3R மரபணுவின் இரண்டு பிரதிகளும் விகாரமடைந்திருந்தன. இது மிகவும் அபூர்வமாக நடைபெறும் சம்பவம்.

இவ்வாராய்ச்சிகளின் பிரகாரம் விஞ்ஞானிகள் எடுத்த முடிவு: உடலிலுள்ள ஊட்டச்சத்துக்களின் தகைமையை மூளை அறிந்து அதன் பிரகாரம் உடல் வளர்ச்சி மற்றும் பருவமடைதல் பற்றிய தீர்மானங்களை எடுக்கிறது என்பதே. இதன்படி ஒருவரது வளர்ச்சியும், பருவமெய்தும் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது.

இக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் வளர்ச்சி குறைந்த மற்றும் தாமதமாகப் பருவமடையும் பிள்ளைகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் அவர்களின் குறைகளைப் போக்க வழி செய்யலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். MC3R ஹோர்மோன் உற்பத்தியைச் செயற்கையாகக் கட்டுப்படுத்துவதானால் இதைச் சாத்தியமாக்க முடியுமென அவர்கள் நம்புகிறார்கள்.

Print Friendly, PDF & Email