இலங்கையில் பரவி வரும் எலிக் காய்ச்சல் – 70 பேர் மரணம்

‘எலிக் காய்ச்சல்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் ‘leptospirosis’ எனப்படும் மனிதர்களைத் தாக்கும் நோயினால் இதுவரை 70 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதுவரை சுமார் 6,100 பேர்வரை இந் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது மழை காலமாகையால் நோய் பரவும் வேகம் அதிகமாக இருப்பதாகவும் முதன்மை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் 1,341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் மாடுமுள்ளனர்.

இந் நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட இதர பிரதேசங்களாக அனுராதபுரம், கேகாலை, பொலனறுவ மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

மோசமான காய்ச்சல், தலை வலி, குளிர், தசைகளில் வலி, வாந்தி, மஞ்சள் காமாளை, கண் சிவப்படைதல், வயிற்று வலி, வயிற்றோட்டம், கிரந்தி ஆகிய பல அறிகுறிகளை இந் நோய் ஏற்படுத்துகிறது. சிலருக்கு அறிகுறிகள் காட்டப்படுவதில்லை.

பொதுவாக, நோய் தொற்றி 2 நாள் முதல் 4 வாரங்களுக்குப் பின்னர் அறிகுறிகள் தெஇயவாரம்பிக்கின்றன.

‘லெப்ரோஸ்பைறோசிஸ்’ சிலரில் இரண்டு கட்டங்களாக வெளிப்படலாம் (2-phases).

  • முதலாவது கட்டத்தில், காய்ச்சல், குளிர், தலைவலை, தசை வலி, வாந்தி அல்லது வயிற்றோட்டம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். நோயாளி பெரும்பாலும் கொஞ்சக் காலத்ததுக்கு குணமாக இருப்பார். மீண்டும் அவர் நோயறிகுறிகளைக் காட்டுவார்.

  • இரண்டாவது கட்டம் ஏற்பட்டால், இது மோசமாக இருக்கும். நோயாளியின் சிறுநீரகம், ஈரல் போந்றவை பாதிக்கப்பட வாய்ப்புண்டு அல்லது மூளைக் காய்ச்சலுக்கு (meningitis) ஆளாகலாம்.

இந் நோய் குணமாவதற்கு 3 வாரங்களோ அல்லது அதற்கு மேலாகவோ எடுக்கலாம்.

Print Friendly, PDF & Email